குறுகிய விளக்கம்
பண்ணைத் தங்ககத்தில் தங்கியிருப்போர் விரும்பினால் கற்பகவனத்தில் வேலை செய்யமுடியும்.
வேலை
எமது பண்ணைத் தங்ககத்தில் தங்கியிருப்போர் கற்பகவனத்தின் மரக்கறித்தோட்டம், மழமரத்தோட்டம், மூலிகைத்தோட்டம், கால்நடை பராமரிப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, கூட்டெரு உற்பத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் அல்லது சிலவற்றில் வேலை செய்து புதுவிதமான அனுபவத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
பண்ணையில் தங்குவோர், மேற்குறிப்பிட்டவற்றில் தமக்கு விரும்பிய ஏதாவது இடத்தில் பகல்பொழுதில் வேலை ஒன்றினை செய்து அன்றைய பொழுதினை வித்தியாசமாக போக்க முடியும்.
காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் வேலை மாலை 5.00 மணிவரை தொடரும். காலை, மாலை இரண்டு தேநீர் இடைவேளையும் மதிய ஒரு மணிநேரம் உணவு இடைவேளையும் வழங்கப்படும். அத்துடன் தொழிலாளர்களிற்கு வழங்கப்படும் நாட்கூலியினையும் பெற்றுக்கொள்ளலாம்.